கிரகங்களின் ராஜா சூரியன்

வணக்கம்
1. ஜோதிட ஆர்வலர்களுக்கு விருந்தாக ஜிகே ஆஸ்ட்ரோ அகாடெமியின் கட்டுரை பகுதிகளின் இது இனிய துவக்கம் !
2. அனைவருக்கும் ஜோதிடம் போய் சேர வேண்டும் என்ற குருநாதர் திருப்பூர் ஜிகே அய்யா அவர்களின் வார்த்தைகளுக்கு இணங்க இந்த கட்டுரை துவங்குகிறது.
3. ஜோதிடம் என்னும் மஹா சமுத்திரத்தின் முக்கிய சக்தியான ஒளியின் உருவான சூரியனை வணங்கி சூரியனை பற்றி அறிந்த மற்றும் சில அறியாத ஜோதிட ரீதியான தகவல்களை திரட்டி சுருக்கமான கட்டுரையாக தருவது சிறப்பு என்று கருதுகிறேன்.
4. ஜோதிடத்தில் முக்கிய அம்சமாக விளங்கும் பஞ்ச பூதங்களின் சாட்சியான பஞ்சாங்கத்தின் திதி யோகம் கரணம் போன்ற விஷயங்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் முகூர்த்தங்கள் ராகுகாலம் எமகண்டம் மாந்தி போன்ற கணிதங்களுக்கும் பிரசன்ன ஜோதிட முறைகளில் உதயம் லக்னம் போன்றவை கணிக்கவும் சூரியனின் பங்கு சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரம் போன்றவையும் மிக முக்கியமாக பயன்படுத்துகிறோம்.
5. ஜோதிடம் என்ற சொல்லின் மூலம் ஒளி தான். ஓளியின் மூல சக்தியே இந்த சூரியன் தான். சூரியனே அண்டத்தின் இயக்கத்திற்கும் உயிர்களுக்கும் முக்கிய காரணி. சூரியனின் இயக்கத்தை வைத்தே பன்னிரண்டு தமிழ் மாதங்கள் அயன காலங்கள் பருவ காலங்கள் போன்றவை நிர்ணயிக்கப்படுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
6. புராண நூல்களின்படி சூரியன் மகரிஷி காஷ்யப் மற்றும் அதிதி ஆகியோரின் மகன். ஜோதிடத்தில் சூரியனை கிரகங்களின் ராஜா என்றும் சிம்ம ராசியின் அதிபதி என்றும் கூறுகிறோம். எனவே ஒருவருக்கு ராஜ தொடர்புகள் அரசு தொடர்புகள் போன்ற உயர் நிலை பலன்களை தருவதில் சூரியன் முக்கிய பங்கு வகிக்கிறது.
7. சூரிய பகவான் அக்னியை அதிதேவதையாகக் கொண்டவர். ஆதவன் கதிர் கதிரவன் ரவி பகலவன் ஞாயிறு அருணன் ஆதித்யன் தினகரன் பரிதி͇ பாஸ்கரன் திவாகரன் ேபுான்ற பல பெயர்கள் வருக்கு உண்டு.
8. சூரியனின் மேலும் சில முக்கிய காரகங்களை பார்க்கலாம். மனித உடலில் ஆன்மாவைப் பிரதிபலிப்பவர் சூரியன். சூரியன்-பிதுர் ஆத்ம கரு உருவாகும் மூலம் ஆகியவற்றின் காரகம் பெறுகிறார்.
9. சூரியன் குறிக்கும் குணங்கள் :
கௌரவம்உயர்ந்த பண்பு ஆண்மை தூய்மை வெளிச்சம் ஒப்பீடு இல்லாத உறவு தலைமை பண்பு கற்பனை நாணயம் அதிகாரம் நம்பிக்கை சுயநிலை சுயஉயர்வு போன்ற முக்கிய குணங்களின் காரகர் சூரியன்.
10. சூரியன் குறிக்கும் இடங்கள் :
அரண்மனை தலைநகர் கூரைப்பந்தல் மாடி கோட்டை உயர்ந்த கட்டிடங்கள் அடுக்கு மாடி மற்றும் வாடகை தரும் கட்டிடங்கள் முனிசிபல் அலுவலகம் காடுகள் மலை பாங்கான இடங்கள்.
11. சூரியன் சுட்டிக் காட்டும் திசை – கிழக்கு
12. சூரியன் குறிக்கும் மரங்கள் வில்வ மரம் சந்தன மரம் உயர்ந்த தென்னை மற்றும் பனை மரங்கள் ருட்ராகூஷ மரங்கள் வைரம் பாய்ந்த மரங்கள் மலை பிரதேசங்களில் உள்ள மரங்கள் காடுகளின் உயரமான மரங்கள் 25 வயதிற்கு மேற்பட்ட வேப்ப மரம்.
13. சூரியன் குறிக்கும் தாவர பொருட்கள் – மருந்து மற்றும் மானமுள்ள தாவரங்கள் மிளகு சாமந்தி பூ கோதுமை ஓமம் எருக்கு பூண்டு பெருங்காயம் சூரிய காந்தி ஆரஞ்சு ஜாதிக்காய் வெந்தயம் பாதாம் மற்றும் விபூதி.
14. சூரியன் குறிக்கும் வேதிப் பொருட்கள் – உலோகங்கள் குரோமியம் பொட்டாசியம் ஹீலியம் பஞ்சலோக உலோகங்கள் தாமிரம் மற்றும் மாணிக்க கற்கள்.
15. சூரியன் குறிக்கும் உறவுகள் – தந்தை மாமனார் மூத்த மகன் அரசியல்வாதி தலைவர் பொறுப்பில் ருப்பவர் மேனேஜர் நிர்வாகி மத்திய – மாநில அவை உறுப்பினர்கள் அரசு கடன் தருபவர் ஊர் பெரியவர்கள் அலோபதி மருத்துவர் நிர்வாக மருத்துவர் குற்றங்களுக்கு முடிவு தருபவர் நிதியை பெருக்கும் பொறுப்பில் இருப்பவர் முன்னோர்கள் – பிதுர் வனவாசம் செய்பவர் தந்தை வழி மூத்த உறவுகள் ஆன்மிக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்.
16. சூரியன் குறிக்கும் தெய்வங்கள் – சிவ வழிபாடு ஜோதி வழிபாடு சுயம்பு தெய்வங்கள் நெருப்பு வழிபாடு காயத்ரி மந்திரங்கள் ஆன்ம வழிபாடு மலைகளில் உள்ள தெய்வங்கள்.
17. மருத்துவ ஜோதிடத்தில் சூரியன் – சூரியன் மருத்துவ ஜோதிடத்தில் கம்பீரமான தோற்றத்துக்கும் உடலில் உள்ள எலும்புகளுக்கும் தலைப் பகுதிக்கும் உள் உஷ்ணம் தலைவலி பசி மயக்கம் கனவுகளால் தூக்கமின்மை பார்வை குறைபாடு முகப்பரு தீ புண்கள் அம்மை நோய் தோல் வெடிப்புகள் பித்தம் தொடர்பு நோய்கள் இருதயம் ஹெர்னியா முதுகு தண்டுவடம் சர வாங்கி தொற்று மூலம் பரவும் நோய்கள் என பல நோய்களுக்கு காரணியாக விளங்குகிறது.
18. கால புருஷனுக்கு ஐந்தாம் அதிபதி சூரியன். எனவே குழந்தை பிறப்பு முதுகு வழி மார்பு பகுதி தொடர்பு நோய்களுக்கும் சூரியனே முக்கிய காரணி. தானாக இயங்கும் உறுப்புகளின் முக்கிய காரணி சூரியன்.
19. சூரியன் குறிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் – சூரியன் விலங்குகளில் காளை மாடு எருது மான் ஆண்யானை சிங்கம் வெள்ளாடு பெண் மயில் வாத்து தீக்கோழி நீண்ட வாழ் உள்ள பறவைகள் போன்றவற்றை குறிக்கும்.
20. சூரியன் – சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அதிபதி.
சூரியனின் மூன்று நட்சத்திரங்கள் – கிருத்திகை (ராட்சச கணம்) உத்திரம் மற்றும் உத்திராடம் (மனுஷ கணம்) ஆகும். சூரியனுக்கு மூலத்திரிகோண மற்றும் ஆட்சி வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம். நீச வீடு துலாம்.
21. சூரியன் குறிக்கும் கல்வி – சூரியன் அரசியல் அறிவியல் மேலாண்மை வன அறிவியல் நிர்வாகம் அலோபதி மருத்துவம் பாதுகாப்பு மேலாண்மை போன்ற கேள்விகளின் முக்கிய காரகர் ஆவார்.
22. வேதங்களில் தலைசிறந்த மந்திரம் “காயத்ரி மந்திரம்”. காயத்ரி மந்திரத்திற்கு உரியவர் சூரியன். சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷமானது. சூரிய வழிபாடு நம் ஆன்மீகத்தின் சிறப்பம்சம். சூரிய வழிபாடு செய்வதால் ஆன்ம பலமும் உடல் வலிமையும் நமக்குக் கிடைக்கும்.
ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருக்கும் ஜாதகர்கள் தினமும் “சூரிய நமஸ்காரம்” செய்வது ஆதித்திய ஹிருதய மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது இயலாதோர்க்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பது அன்னதானம் செய்வது கண் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வது தானியங்களைப் பறவைகளுக்குத் தருவது கோதுமை தானம் செய்வது வெல்லம் வெண்கலப் பாத்திரங்களை கோயிலுக்குத் தானம் செய்வது தந்தையைக் கவனித்துக் கொள்வது பித்ரு காரியங்களை செய்வது போன்றவை மிகுந்த நலம் தரும் பரிகாரங்கள்.
சூரியனுக்கு ஸ்தலம் கும்பகோணம் அருகே சூரியனார் ஸ்தலம் (ஆடுதுறை). சிவனின் வழிபாடு. ஜோதி ரூபா வழிபாடு சூரியனுக்கு சிறப்பு. எல்லா சிவாலயங்களிலும் சூரியனின் ரூபம் உள்ளது. உயர் நிலையை அடையவும் உயர் பதவி மனதில் நினைத்த புகழை பெறவும் சூரியன் வழிபாடு செய்து தோஷங்களை நீக்கி புகழ் பெறுவோமாக !

நன்றிகளுடன்

திருப்பூர் ஜிகே அய்யா அவர்களின் மாணவன்
திருநெல்வேலி மணிகண்டன்
அலைபேசி : 8130769129