Description
இராகு, கேதுவினைப் பற்றிய விரிவான விளக்கமான ஒரு ஆய்வே சாயாகிரக நாடி என்ற இந்நூலாகும். இராகு,கேது தரும் பல ஜென்மங்களின் தொடர்பால் ஏற்பட்ட கர்மா என்ன அதனால் ஜாதகருக்கு ஏற்படும் பலன் என்ன என்பதையும் விரிவாக விளக்குகிறது. ஒருவரின் ஜாதகத்தில் இராகு, கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் குணம், செயல்பாடு போன்றவற்றை மிக விளக்கமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறது. இராகு, கேதுவின் காரகத்துவத்தை விளக்கியும், அவை தரும் மனோபாவங்களையும் விளக்கிக் காட்டுகிறது. கோட்சாரத்தில் இராகு, கேது தரும் சம்பவங்களையும், சம்பவங்களால் ஏற்படும் துக்கங்களையும் விளக்கிறது. ஒருவருக்கு இராகு ,கேது துன்பத்தை மட்டும் தருவதில்லை. பல்வேறு யோகங்களையும் தருகிறது. இராகு, கேது அனுமதித்தால் மட்டுமே ஒருவருக்கு மிக உயர்ந்த பதவிகளும், புகழும் கிடைக்கும் என்பதையும் விரிவாக விளக்கிறது. தோஷத்தைத் தருவதில் பாவக ரீதியாக மட்டுமல்ல காரக ரீதியாகவும் தோஷத்தைத் தருகின்றன. இரண்டு வகைத் தோஷமும் தசா, புத்தியாலும், கோட்சாரத்தாலும் தனித்தனியாக வகைப்படுத்தி சம்வங்களைத் தருகின்றன என்று விளக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.