Description
தாம்பூல பிரசன்னம் என்ற இந்த நூல் பிரசன்னங்களில் மிக எளிமையானதாகவும், சிறந்த பலன் தரத்தக்கவும் எழுதப்பட்டுள்ளது. பல இடங்களில் வெற்றிலைப் பிரசன்னம் என்ற பெயரில் மிகவும் பிரபலமாக உள்ளது. அம்முறை பரவலாகப் பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பல ஆய்வுக்கருத்துக்களுடன் , எனது ஆசிரியரின் கருத்துக்களையும் சேர்த்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கு இருக்கும் பிரச்சனைகள் தீரும் காலம், இருக்கும் தோஷங்கள் அவை தடுக்கின்ற பலன்கள் என்ன அவற்றில் இருந்து மீளுவது எப்படி குல தெய்வ அனுக்கிரகம் உண்டா இல்லையா இல்லாமல் இருந்தால் ஏற்படுத்திக் கொள்ள என்ன செய்வது போன்ற விபரங்களும், தாம்பூல இலக்கினத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகங்கள் எப்படி ஒருவரின் கேள்வியைச் சுட்டிக் காட்டுகிறது அதன் பலன் என்பதையும் எளிதில் விளக்குகிறது. ஜாதகம் இல்லாதவர்களுக்கு தங்களின் பலனை அறிந்து கொள்வதற்கு இது மிகச்சிறந்த பிரசன்ன முறையாகும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும் படியாகவும், பயன்படுத்தும்படியாகவும் எழுதப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.
Reviews
There are no reviews yet.